ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழில் 'நோட்டா' என்ற படத்தில் நடித்தவர் தெலுங்குத் திரையுலகத்தின் இளம் நாயகனான விஜய் தேவரகொன்டா. அவரது சில தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி அவருக்கு இங்கும் பிரபலத்தைக் கொடுத்துள்ளது. 'வாரிசு' பட கதாநாயகியான ராஷ்மிகாவும், விஜய் தேவரகொன்டாவும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இருவரும் காதலிக்கிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.
இருவரும் இணைந்து சுற்றுலா சென்றார்கள், விஜய் தேவரகொன்டா வீட்டில் ரஷ்மிகா தீபாவளி கொண்டாடினார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதனிடையே, இருவரும் ஒரு ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்களும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற 'புஷ்பா 2' நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேச வந்த போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், “உங்களுக்கு மாப்பிள்ளை சினிமாத் துறையா, வெளியில் உள்ளவரா” என்று கேட்டார். அதற்கு ராஷ்மிகா, “இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்” என உடனே பதிலளித்தார். அவரது பதிலைக் கேட்டு அல்லு அர்ஜுன், ஸ்ரீ லீலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் ரசித்து சிரித்தனர்.