விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ, மோனிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'மிஸ் யூ'. சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், அனுபமா குமார், ரமா, சஷ்டிகா, மாறன் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 'மாப்ள சிங்கம்', 'களத்தில் சந்திப்போம்' ஆகிய படங்களை தொடர்ந்து என்.ராஜசேகர் இயக்கியுள்ளார். வரும் 29ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பாடல்களை வெளியிட்டு கார்த்தி பேசியதாவது : என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த அந்த சமயத்தில் தான் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள். சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது, அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பென்ச் தான் போல இருக்கிறதே, இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே, நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது.
சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, நிறைய படிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் கத்துக்கிட்டேன். இந்த படத்தின் டைட்டில் 'மிஸ் யூ'. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் 'லவ் யூ'. பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன. ஆனால் நாம் ஆக்ஷன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு விஜய் சார் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை.
பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. காதல் படங்கள் குறைந்து விட்டது வருத்தமாக இருக்கிறது. அதிகமான காதல் படங்கள் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.