புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'புஷ்பா' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி அடுத்த மாதம் 5ம் தேதி வெளிவருகிறது. தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது.
படத்தை தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் தமிழ் பதிப்பு அறிமுக விழா, படத்தில் ஸ்ரீலீலா நடனம் இடம்பெறும் பாடல் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜூன் பேசியதாவது:
இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேனோ அது இன்று நடந்திருக்கிறது. இதற்கு முன்பு சென்னையில் பல விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய அரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முதல் 20 வருடம் எங்கு வாழ்கிறேனோ அந்த மண்ணுக்கே அந்த மனிதனின் சாதனைகள் சொந்தம் என்பார்கள். அந்த வகையில் இந்திய அளவில் உலக அளவில் நான் என்ன சாதித்தாலும் அது இந்த தமிழ் மண்ணுக்கு சொந்தம். நான் இன்னும் என்னை சாதாரண தி.நகர் பையனாகவே உணர்கிறேன். என்னுடைய ஆணி வேர் சென்னையில்தான் இருக்கிறது.
நான் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு மொழி தெரிந்திருந்தால் அந்த மொழியில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு நன்றாக தெரியும் அதனால் இங்கு வந்தால் தமிழில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு பிடித்த மொழி, என்னை வாழ வைத்த மொழி. 3 வருட கடின உழைப்பில் புஷ்பா 2 உருவாகி இருக்கிறது. இது தெலுங்கு படம் அல்ல. இந்திய படம். ஒரே நாடு, ஒரே சினிமா என்பதுதான் எனது பாலிசி.
இவ்வாறு அவர் கூறினார்.