'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

பொதுவாக கே.பாலச்சந்தர் நகர்புறத்து நடுத்தர மக்களையே கதை மாந்தர்களாக கொண்டு படம் எடுப்பார் என்ற பொதுவான கருத்து இருந்த காலத்தில் அவர் இயக்கிய கிராமத்து படம்தான் 'எங்க ஊரு கண்ணகி'. இதே படம் தெலுங்கில் 'தோலி கோடி கோசிந்தி' என்ற பெயரிலும் தயாரானது. பார்வை குறைபாடுள்ள ஒரு கிராமத்து பெண். அங்குள்ள வில்லன்களை எதிர்த்து போராடும் கதை.
பார்வையற்ற பெண்ணாக சரிதா நடித்தார், போலீஸ் கான்ஸ்டபிளாக சரத்பாபு நடித்தார். இவர்கள் தவிர சீமா, மாதவி, ஜீவா உள்பட பலர் நடித்திருந்தார்கள். முக்கிய நடிகர்கள் தவிர தமிழ், தெலுங்கிற்கு தனித்தனி நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழு படமும் ஆந்திராவில் உள்ள பட்டிசீமா வீரபத்தா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமானது. இதனால் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வாசனை வீசியது. வில்லன் மீது நாயை ஏவி விடுவது, சரிதா, சீமா, மாதவி ஆகியோரின் குளியல் காட்சிகள் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழில் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடலாசிரியர் என 1981ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.