பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் |
வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனை கலந்து சொன்னால் அது வரலாற்று புனைவு(பொன்னியின் செல்வன்) விஞ்ஞானத்தை புனைவாக சொன்னால் அது சயின்ஸ் பிக்சன்(டைம் டிராவல்). அதுபோல புராண கதைகளோடு கற்பனையை கலந்தால் அது புராண புனைவு கதை. எமதர்மராஜனின் தவறால் தவறாக இறக்கும் மனிதன் அந்த எமனையே கேள்வி கேட்பது (எமனுக்கு எமன்), பக்தனின் பிரச்சினைகளை தீர்க்க அந்த பரமசிவனே பூமிக்கு வருவது (ருத்ரதாண்டம்) போன்றை புராண புனைவு கதைகள். இப்படியான படங்களுக்கு முன்னோடி 'ரம்பையின் காதல்'.
இந்திரன் சபையில் ஆடும் நாட்டியக்காரியான ரம்பை ஒரு நாள் பூமியை சுற்றி பார்க்க வருகிறாள். பூமியின் அழகில் மயங்கும் அவர் இந்திரலோகம் திரும்ப மறந்து விடுகிறார். ரம்பையை காணாத இந்திரன் அவள் பூமியிலேயே சிலையாக நிற்கட்டும் என்று சாபமிடுகிறார். வேண்டுமானால் இரவில் மட்டம் இந்திரலோகம் வந்த நடனமாடிச் செல்லலாம் என்று சாபத்திற்கு ஒரு சலுகையும் வழங்குகிறார்.
பூலோகத்தில் சிலையாக இருக்கும்போது ஒரு கிராமத்து அப்பாவி இளைஞனான யத்யவிஷயன் என்பவர் விளையாட்டாக ரம்பையின் சிலைக்கு மாலையிடுகிறார். இந்திரலோக விதிமுறைகளின் படி பெண்ணின் கழுத்தில் யார் மலையிடுகிறார்களோ அவர்களே அந்த பெண்ணின் கணவனாகி விடுவார்கள். அந்த வகையில் தனது கணவராகிவிட்ட யத்யவிஷயனை இரவில் இந்திரலோகம் அழைத்து செல்கிறார் ரம்பை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சுவாரஸ்யமான இந்த கதை அப்போது பெரிதும் ரசிக்கப்பட்டது. படம் வெளியான தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது, 30 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் இந்த படத்தில் ரம்பையாக நடித்த கே.எல்.வி.வசந்தா. அவரது அழகு அன்றைய ரசிகர்களை திரும்ப திரும்ப தியேட்டர்களுக்கு இழுத்தது. அப்பாவி இளைஞன் யத்விஷயனாக கே.சாரங்கபாணி நடித்தார். பாலசுப்ரமணியம் இந்திரனாக நடித்தார். எஸ்.எஸ்.மல்லையா எமனாக நடித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது ஆனால் இசை அமைப்பாளர் யார் என்று படத்தின் டைட்டிலில் குறிப்பிடாமல் இசை கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டது. சென்டிரல் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்தது.