22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி சினிமாக்கள் 1000 கோடி வசூலைக் கடந்த சாதனையை நிகழ்த்தியிருக்கின்றன. ஹிந்தியில் 3 படங்கள், தெலுங்கில் 3 படங்கள், கன்னடத்தில் ஒரு படம் அந்த சாதனையைப் புரிந்திருக்கின்றன.
இந்திய சினிமாவில் முக்கியமான பங்காற்றி வரும் தமிழ் சினிமாவில் இந்த சாதனை இன்னும் நிகழ்த்தப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்தான். இந்த ஆண்டில் வெளியான சில படங்கள் அந்த சாதனையைப் படைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இந்த வருடம் 500 கோடி என்பதே இதுவரை எட்டாமல் உள்ளது.
சூர்யா நடித்த 'கங்குவா' படம் 2000 கோடி வசூலைத் தாண்டும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அப்படி ஒன்று நடந்துவிடுமோ என்று ரசிகர்களும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால், அப்படம் 200 கோடியைக் கூட நெருங்கவில்லை.
அதனால், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 1000 கோடி என்பது கனவாகவே முடியப் போகிறது. இதற்குப் பிறகு வெளிவர உள்ள தமிழ்ப் படங்கள் அதை நிகழ்த்த நிச்சயம் வாய்ப்பில்லை. 2025ல் அந்த 1000 கோடி வசூல் நடக்குமா என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
ரஜினியின் 'கூலி', கமல்ஹாசனின் 'தக் லைப்', விஜய்யின் கடைசி படமாக 'விஜய் 69', அஜித்தின் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என எந்தப் படம் அந்த சாதனையை புரியப் போகிறது?.