சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாள திரையுலகில் நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி ஆகியோர் எந்த ஈகோவும் இல்லாமல் ஒருவரின் படங்களில் இன்னொருவர் இணைந்து நடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாகவே மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் விதமான கதை எதுவும் அமையாததால் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள். தற்போது விஸ்வரூபம் பட எடிட்டரும், மலையாளத்தில் டேக் ஆப், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் அப்படி இவர்களுக்கான ஒரு பக்காவான கதையுடன் சென்று அவர்களை சம்மதிக்க வைத்து தற்போது படப்பிடிப்பையும் துவங்கி நடத்தி வருகிறார்.
இவர்கள் மட்டுமல்ல இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என முக்கிய நட்சத்திரங்களும் மேலும் மலையாள திரையில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த 2008ல் இப்படி மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட அனைத்து மலையாள நட்சத்திரங்களும் இணைந்து நடித்த 20-20 என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு படமாக இது உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை தயாரிப்பது மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் இருவரும் தான். 20-20 படம் மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கு நிதி திரட்டும் விதமாக உருவானது. அதேபோல முழுக்க இல்லாவிட்டாலும் இந்த படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு மலையாள நடிகர் சங்கத்துக்கு வழங்கப்படும் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகை கலகலக்க செய்தது நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை. அதனால் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி நடிகர் சங்கத்தைச் சேர்ந்த மோகன்லால் உள்ளிட்ட அனைவருமே கூண்டோடு ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்த நிலையில் அந்த விஷயங்களை திசை திருப்பும் விதமாக தான் இப்படி ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்கள் என்ற பேச்சும் மலையாள திரையுலகில் நிலவுகிறது.
மேலும் இந்த படத்தில் பல மலையாள நட்சத்திரங்களையும் நடிக்க வைப்பதன் மூலம் இதுவரை எழுந்த சர்ச்சுகளை நீர்த்துப் போகச் செய்யவும் புதிய சர்ச்சைகள் எழாமல் இருக்கவும் இப்படி ஒரு படம் தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பெரும்பாலும் நடிகர்கள் பலர் தாங்களும் இடம் பெற வேண்டும் என நினைப்பதால் தொடர்ந்து பாலியல் புகார் சர்ச்சைகளை எழுப்ப மாட்டார்கள் என்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது.