தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்களை தயாரித்துள்ளனர். தற்போது 100வது படத்தை தயாரிக்க நெருங்கியுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க விரும்பினர். ஆனால் விஜய் அரசியலை நோக்கி பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் வாய்பில்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படமாக அவர்கள் நிறுவனத்தில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சரத்குமார் உடன் ஜீவா முதன்மைத் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இந்த பாகத்தை விக்ரமன் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக பிரபு சாலமனின் இணை இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




