விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் |

மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் மேகநாதன். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60. இவரது தந்தை பாலன் கே நாயர் மலையாள திரை உலகின் சீனியர் நடிகராக இருந்தவர். மேகநாதன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னை மற்றும் கோவையில் தான் முடித்தார். ஆனாலும் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடிகராக நுழைந்தார். 1983ல் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த அஸ்திரம் என்கிற படத்தில் தான் இவர் அறிமுகமானார்.
அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இவரை நிறைய தேடி வந்தன. சமீப வருடங்களாக துணை வில்லன், கெட்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடு மேகநாதனை என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார். ஆக்ஷன் ஹீரோ பைஜூ, பிக்கெட் 43, சண்டே ஹாலிடே, நேரறியான் சிபிஐ, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும்படியானவை. கடைசியாக கடந்த 2022ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான கூமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.