தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலையை கந்தன் மலை என்று ஒரு சாரரும், அது சிக்கந்தர் மலை என்று ஒரு சாரரும் கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை மையமாகக் கொண்டு கந்தன் மலை என்ற பெயரில் தற்போது ஒரு படம் உருவாகி இருக்கிறது. அதில், பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் முறுக்கு மீசை, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் தோன்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. அந்த போஸ்டரில் அவருக்கு தர்ம போராளி என்றும் பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள். இந்த நிலையில் இன்று கந்தன் மலை படத்தின் முதல் பாடலான கந்தன் மலையை தொட்டுப் பாரு என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதை எச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.