9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கன்னட சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரச்சிதா ராம். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அக்டோபர் மூன்றாம் தேதியான நேற்று ரச்சிதா ராம் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதோடு, ரச்சிதா ராம் கன்னடத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் லேண்ட் லார்ட் என்ற படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
இதில் ரச்சிதா ராமின் பெயருக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கூலி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். அது மிகப்பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நான் நடிக்கிறேன். கூலி படத்திற்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரங்கள் அதிகமாக வருகிறது என்று கூறியிருக்கும் ரச்சிதா ராம், எனது பெற்றோர் தற்போது எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதனால் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தனது பிறந்தநாள் செய்தியாக வெளியிட்டுள்ளார் ரச்சிதா ராம்.
முன்னதாக தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இப்போது அவருக்கு போட்டியாக அதே டைட்டிலில் ரச்சிதா ராம் களமிறங்கி உள்ளார்.