9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் 2015ல் 'பாகுபலி 1', 2017ல் 'பாகுபலி 2' படங்கள் வெளிவந்தன. அதில் முதல் பாகம் 600 கோடி வசூலையும், இரண்டாம் பாகம் 1800 கோடி வசூலையும் குவித்தது.
இந்நிலையில் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள். ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், டி பாக்ஸ், டால்பி சினிமா, எபிக்' ஆகிய திரை தொழில்நுட்பங்களில் படத்தைத் திரையிட உள்ளார்கள்.
'பாகுபலி எபிக்' படம் வெளியாக இருப்பதால் தற்போது ஓடிடி தளங்களில் இடம் பெற்றிருந்த 'பாகுபலி 1, 2' ஆகிய படங்களை அதிலிருந்து தூக்கி உள்ளார்கள். 'பாகுபலி எபிக்' படம் தியேட்டர்களில் ஓடி முடிந்த பிறகு அது மீண்டும் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, நெட்பிளிக்ஸ் தளத்திற்கான வருட உரிமை முடிந்திருக்கலாம், அதனால் நீக்கியிருப்பார்கள் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.