தெலுங்கு படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாடிய விஜய் பட நடிகை | ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் இணையும் அபர்ணா பாலமுரளி | 11,600 பரதநாட்டிய கலைஞர்களை வைத்து கின்னஸ் சாதனை செய்த நடிகை திவ்யா உன்னி | 12 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மானின் 'உஸ்தாத் ஹோட்டல்' | என் பெயர் கீர்த்தி தோசா அல்ல.. கீர்த்தி சுரேஷ் கலாட்டா | கேரவன் கலாசாரம் எனக்கு பிடிக்காது ; ஷோபனா | பாத்ரூம் பார்வதி என கிண்டல் செய்தார்கள் ; நடிகை பார்வதி அதிர்ச்சி தகவல் | மதம் மாறியது ஏன்? ரெஜினா விளக்கம் | கேம் சேஞ்சர் படத்துக்காக ஷங்கரிடம், தில் ராஜு வைத்த கோரிக்கை! | காளிதாஸ் 2ம் பாகத்தில் பவானி ஸ்ரீ |
மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இடவேள பாபு. இவர் கடந்த மாதம் வரை மலையாள நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வைத்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல் துறையில் புகார்கள் அளிக்க தொடங்கினர்.
அதில் நடிகர் இடைவேள பாபு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இது குறித்த விசாரணைக்கு அவரை வரவழைத்த போலீசார் அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த போலீசார் அதன் பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.