பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ரஜினியின் பல வெற்றி படங்களின் பெயர்கள் புதிய படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கன்னட படம் ஒன்றுக்கு ரஜினியின் 3 படங்களின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிச்சா சுதீப் நடிக்கும் படத்திற்கு 'பில்லா ரங்கா பாட்ஷா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனூப் பண்டாரி இயக்குகிறார். 'ஹனுமான்' பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கின்றனர்.
இந்த படம் 2209ம் ஆண்டு நடப்பது மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் கதை. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராகிறது. படம் பற்றி இயக்குனர் அனுப் பண்டாரி கூறும்போது 'சுதீப் உடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது” என்றார்.
'பில்லா' படத்தின் டைட்டில் பாலாஜியின் சுரேஷ் ஆர்ட்ஸ் பிலிமிடமும், 'ரங்கா' டைட்டில் தேவர் பிலிம்சிலும், 'பாட்ஷா' டைட்டில் சத்யா மூவிசிடமும் உள்ளது. இந்த நிறுவனங்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. படம் கன்னடத்தில் தயாராவதால் அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.