சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமா புராணம், சமூக கதைகள் என்கிற கட்டத்தையும் 1980களில் அழகியலோடு படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் அதிரடியாக வெளியாகி பரபரப்பு கிளப்பிய படம் 'ஜம்பு'. ஒளிப்பதிவாளர் கர்ணன் தயாரித்து, இயக்கினார். இதில் ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், தேங்காய் சீனிவாசன், எம்ஆர்ஆர் வாசு , மனோரமா மற்றும் ஜெயமாலா ஆகியோர் நடித்தனர்.
அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுக்குள் விழுகிறது. அவர்கள் உயிர் பிழைக்க போராடுகிறார்கள். அதே காட்டில் வசிப்பவர் ஜெய்சங்கர். வெளி உலகம் அறியாத அவர் டார்ஜான் மாதிரி விலங்குகளோடு வாழ்கிறவர். அவர் எப்படி விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுகிறார். ஜெய்சங்கர் எப்படி காட்டுக்குள் வந்தார் என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு மூன்று ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து இந்த படத்தை இயக்கி இருந்தார் கர்ணன். படத்தில் ஜெய்சங்கர் டார்ஜான் வேடத்திலேயே வருவார், மரத்துக்கு மரம் தாவுவார். கதாநாயகி ஜெயமாலா படு கவர்ச்சியாக ஆடுவார், இன்னும் சில காட்சிகளில் அதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள் படு கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பார்கள். விலங்குகள் இணை சேர்வதை பார்த்துதான் நாயகன், நாயகிக்கு காதலும், காமமும் வரும். இப்படி பல சமாச்சாரங்கள் படத்தில் இருந்தது. இதனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவமாக இருந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வசூல் சாதனை படைத்தது.