டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தவர் மறைந்த பிரபல நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் 2000ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் ஜெய்சங்கர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர்.
விரைவில் இந்த கோரிக்கை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நடிகர் விவேக் வீடு இருந்த விருகம்பாக்கம் சாலைக்கு அவர் பெயரும், சென்னை காம்தார் நகரில் பாடகர் எஸ்.பி.பி வீடு இருந்த சாலைக்கு அவர் பெயரும் வைக்கப்பட்டது. விரைவில் சென்னை பட்டினபாக்கத்தில் ஒரு சாலைக்கு இசையமைப்பாளர் ஏம்.எஸ்.வி பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த வரிசையில் ஜெய்சங்கர் பெயரும் இடம் பெற உள்ளது.