பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா | நடிகர் மோகன் பாபு தலைமறைவா...? | அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின், இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கு திரையுலகம் |
டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். சினிமாவிலும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அவருக்கும் பென்ஸி ரியா என்பவருக்கும் 2022ம் ஆண்டு திருணமானது. கடந்த வருடம் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ரித்தான்யா என அக்குழந்தைக்குப் பெயரிட்டனர். அக்குழந்தையின் முதலாவது பிறந்தநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.
அதில் சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். நடிகர் சூரி, விடிவி கணேஷ், செப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்திருந்தார் புகழ். மணிமேகலை வரவில்லையா, ஷிவாங்கி வரவில்லையா என பலரும் அதில் கமெண்ட் செய்துள்ளனர்.