‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? |

ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'தேவரா 1' படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என தயாரிப்பி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு நேற்று கிடைத்தது. இந்நிலையில் 172 கோடி வசூல் என்பது அதிகமில்லையா என தெலுங்கு ரசிகர்களே கமெண்ட் பகுதியில் கேட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் வசூலாக 191 கோடி வசூலித்தது என்று அறிவித்திருந்தார்கள். 'தேவரா 1' படத்தை விடவும் அப்படம் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஹிந்தியில் அப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விடவும் சுமார் 19 கோடி மட்டுமே குறைவான வசூல் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தான் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருவதாகத் தெரிகிறது.
வசூல் வேட்டை என்பதை விட வசூல் விளையாட்டு என்பதுதான் இந்தக் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக அறிவிக்கப்படுகிறது.