போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்ஸ் போன்ற படங்களில் இணைந்து நடித்த போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுக்கிடையே காதல் உருவானதாக கூறப்பட்டது. அதையடுத்து அவர்கள் அடிக்கடி டேட்டிங் சென்று வந்தார்கள். என்றாலும் தங்களது காதலை அவர்கள் இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு அவர்கள் இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாக டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ராஷ்மிகா செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. அந்த ஹோட்டலுக்குள் சென்றதும் அவர் அந்த மாஸ்க்கை எடுத்து விடுகிறார். அதேபோன்று அதே ஓட்டலின் பின்புறமாக நடிகர் விஜய் தேவரகொண்டாவும் முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் தொப்பி அணிந்தபடி உள்ளே செல்கிறார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.