ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் இட்லிக்கடை படத்தில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்டப்படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படத்தோடு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் - நித்யாமேனனின் கால்சீட் பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடையாததால் ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டார்கள்.
இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் இட்லி கடை படத்தின் போஸ்டரை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு, இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கப் போகிறது என்று பதிவிட்டிருந்தார். அதையடுத்து ரசிகர்கள் இட்லிக்கடை படத்தின் ரிலீஸ் எப்போது? என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு நாங்கள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். அதனால் தல வருகிறார், அவரை பாருங்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார் அருண் விஜய்.