பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சூர்யா நடித்த 'ரெட்ரோ' கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்தினார் சூர்யா. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விஜய்தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசும்போது பழங்குடியின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து தெலுங்கானா பழங்குடி இன வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோன்று மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், சைபராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராய்துர்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போன்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவ் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில் விஜய்தேவரகொண்டா வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டால் வழக்கு முடிவுக்கு வரும் இல்லாவிட்டால் விஜயதேவரகொண்டா கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.