சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

மாடல் அழகியான மீரா மிதுன் அழகி போட்டிகளை நடத்தி வந்தார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாகப் பேசி, சமூக வலைதளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்த புகாரில், போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் .
இந்த வழக்கில் மீரா மிதுன், விசாரணைக்கு ஆஜராகாததால், 2022ம் ஆண்டில் அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். டில்லியில் இருந்த அவர் சமீபத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தமது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகளவில் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நடந்து கொண்டிருக்கும் நீதிமன்றத்தில்தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என கூறி மீரா மிதுனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




