‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த மீரா மிதுன் தன்னை பெரிய நடிகை போன்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றியதாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது. அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷங்களை சமூக வலைத்தளத்தில் பேசி பரபரப்பாக்குவார்.
இந்த நிலையில் அவர் பேய காணோம் என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்து வந்தார். கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில்தான் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி அந்த வழக்கில் சிறை சென்றார். தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார்.
விடுதலையானவர் பேய காணோம் படத்தில் மீண்டும் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப் பகுதியில் நடந்து வந்தது. படப்பிடிப்பு நடக்கும்போது மீரா மிதுனை தேடி 6 இளைஞர்கள் வந்துள்ளனர். தங்களை அவர்கள் மீரா மிதுன் நண்பர்கள் என்று கூறி உள்ளனர். காலையில் படப்பிடிப்புக்கு தயாரானவர்களுக்கு அதிர்ச்சி மீரா மிதுனையும் வந்த 6 இளைஞர்களையும் காணவில்லை. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு படக் குழுவினர் சென்னை திரும்பி விட்டார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் கூறியதாவது: வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட பேய் படம் இது.
80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர 20 சதவீதம் படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருந்தது. நாயகி மீரா மிதுன் ஜெயிலில் இருந்து வந்தவுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் கடந்த வாரம் நடத்த திட்டமிட்டு படக்குழுவுடன் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். மீரா மிதுன் மற்றும் இதர கலைஞர்கள் நடிக்க படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.படப்பிடிப்பு முழுவதும் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீரென நடிகை மீரா மிதுனை தேடி 6 நண்பர்கள் வந்தனர். பின்னர் அவர்களுடன் நள்ளிரவில் எங்களுக்கு தெரியாமல் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் வேறு வழியின்றி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டோம். என்றார்.