புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிரபல மாடலான மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நீதிபதி எஸ். அல்லி அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மீரா மிதுன் ஆஜராகாததால் அவரை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டார். சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பிரபலம் தேடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த அவர், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.