சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுனை கேரளாவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பலரது கண்டனத்திற்கு ஆளாகி வந்தார். சமீபத்தில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், ஆஜராகாமல் இந்த சின்ன விஷயத்திற்காக, நாடே போர் களம் போல மாறி உள்ளது. நான் வெளியிட்ட வீடியோவில், ஒட்டுமொத்த பட்டியல் இன மக்கள் குறித்து தவறாக பேசவில்லை; என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு பேசினேன். மீண்டும் என்னை மக்கள் மத்தியில் தவறாக காட்ட முற்படுகின்றனர். வேண்டும் என்றால், என்னை தாராளமாக கைது செய்யுங்கள். காந்தி, நேரு போன்றோர் சிறைக்கு செல்லவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அப்படி ஒரு சூழல் எனக்கு வராது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால், அது கனவில் தான் முடியும். என பேசி, நடிகை மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை கொண்டு வருகின்றனர். முன்னதாக கைதாகும் போது கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் போலீசார் தன் மீது கை வைத்தால் கத்தியை எடுத்து என்னை நானே குத்திக் கொண்டு தற்கொலை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் ‛‛போலீசார் என்னை கைது செய்ய முடியாது, அப்படியே கைது செய்தால் அது கனவில் தான் நடக்கும்'' என தெனாவெட்டாக பேசியிருந்தார் மீரா மிதுன்.