‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
கொரோனா அலை தாக்கம் கடந்த வருடம் வந்த போது, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது ஓடிடி தளங்களில் புதிய படங்கள் நேரடி வெளியீடு என்பது பரபரப்பாக ஆரம்பமானது. கடந்த வருடம் ஓடிடி தளங்களில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. ஆனால், அவற்றில் இரண்டு படங்களுக்கு மட்டுமே நல்ல விமர்சனங்களம், வரவேற்பும் கிடைத்தன.
இந்த வருடத்தில் இதுவரையில் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களில் 20 படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்', மணிரத்னம் தயாரித்த ஆந்தாலஜி படமான 'நவரசா', நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' ஆகிய படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பதிவிடப்பட்ட கமெண்ட்டுகளும் தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து நல்ல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானால் மட்டுமே, மக்கள் தியேட்டர்களுக்கு வருவதைப் பற்றி யோசிப்பார்கள். ஆனால், ஓடிடி தளங்களில் இப்படியான படங்கள் அடிக்கடி வந்தால் ஓடிடியில் அவற்றைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதற்கான சந்தாக்களையும் கட்ட மாட்டார்கள்.
ஓடிடி தளங்களில் படங்களை வாங்கும் பொறுப்பில் இருக்கும் சிலர், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள், கமிஷன்களைத் தர சம்மதிப்பவர்கள் ஆகியோர்களின் படங்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள் என திரையுலகில் உள்ள பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நல்ல படங்களை எடுத்து வைத்துள்ள பல தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களை அணுகினால் அவர்களுக்கு பொறுப்பான பதில் கூட கிடைப்பதில்லை என குமுறுகிறார்கள். ஸ்டார் வேல்யூ இருக்க வேண்டும் என்று சில நிறுவனங்கள் வாங்கிய படங்கள் தலை குப்புற கவிழ்ந்தும் அவர்கள் மாறுவதாகத் தெரியவில்லை.
இரண்டாம் நிலை, மூன்றும் நிலை நடிகர்கள், நடிகைகளை வைத்து எடுத்த படங்களை ஓடிடி நிறுவனங்கள் புறக்கணிக்கிறதாம். அப்படிப்பட்ட படங்களை சில முன்னணி இயக்குனர்கள் அல்லது நடிகர்கள் தயாரித்திருந்தால் மட்டும் அவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்களாம். இப்படி பெரிய நடிகர்கள், நடிகைகளின் தரமில்லாத படங்களை வாங்கி அடி வாங்கினால் தான் ஓடிடி நிறுவனங்களுக்கும் நல்ல பாடமாக அமையும் என சிலர் சபிக்கவும் செய்கிறார்கள்.
ஓடிடி தளங்களில் உள்ள இந்த அரசியல் காரணமாக தியேட்டர்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தகவல். சாதாரண ரசிகர்கள் வந்து படம் பார்க்கும் ஒரே தளமாக சினிமா தியேட்டர்கள் மட்டுமே என்றைக்கும் இருக்கும். தியேட்டர்களைப் புறக்கணித்து ஓடிடி பக்கம் செல்பவர்கள் கூட சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் தங்களிடமே திரும்பி வருவார்கள் என பேசிக் கொள்கிறார்களாம்.