‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பிரபல நடன இயக்குனராக உருவெடுத்துள்ளவர் ஜானி மாஸ்டர். விஜய். அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் வித்தியாசமான நடனங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது அவர் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்று கூறியுள்ளாராம்.
இதுகுறித்து போலீசார் தரப்பிலிருந்து வெளியான சில தகவல்களின்படி ஜானி மாஸ்டர் கூறும் போது, “சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தானாகவே என்னிடம் வந்து வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை அறிந்து என்னிடம் நடன உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்யவும் மிரட்டவும் ஆரம்பித்தார். இந்த விஷயம் குறித்து புஷ்பா படப்பிடிப்பில் இருந்த சமயத்திலேயே இயக்குனர் சுகுமாரிடம் நான் கூறியுள்ளேன். அவரும் ஒரு முறை அந்த பெண்ணை அழைத்து அறிவுரை கூறினார். ஆனாலும் அந்தப் பெண்ணிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த குற்றச்சாட்டு மற்றும் புகாரின் பின்னணியில் எனக்கு எதிராக ஒரு சதி நடந்து இருக்கிறது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார்கள்” என்று கூறியுள்ளாராம்.