Advertisement

சிறப்புச்செய்திகள்

புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் | ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர் | சித்ரா தற்கொலை வழக்கில் மேல்முறையீடு | தி கோட் Vs லப்பர் பந்து - விஜயகாந்த்தைப் பெருமைப்படுத்தியது எந்தப் படம் ?, | தேவரா - தனித்து முதல் வசூல் சாதனையை படைத்த ஜுனியர் என்டிஆர் | சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலியல் புகாரில் ஜாமின் மறுப்பு ; நடிகர் சித்திக் தலைமறைவு

26 செப், 2024 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Actor-Siddique-on-the-run-after-pre-arrest-bail-plea-rejected-in-rape-case


கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா அரசு வெளியிட்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையமாக சேர்ந்து பிறரை வளர விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகர்களான முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் முகேஷ் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

ஆனால் நடிகர் சித்திக்கின் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த சித்திக் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்ற மூலமாக அவருக்கு ஜாமின் பெறுவதற்கான வேலைகளும் துவங்கியுள்ளன. அதன் முடிவை தொடர்ந்து சித்திக் வெளியே வருவார் என சொல்லப்படுகிறது. அதற்குள் போலீசார் அவரை கைது செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் ; தர்ஷனின் ஜாமீன் மனு செப்.,27க்கு தள்ளிவைப்புரேணுகா சுவாமி கொலை வழக்கில் 3 ... ஹேமா கமிஷன் பின்னணியில் உருவாகிறதா கேரளா ஸ்டோரி பார்ட் 2? ; இயக்குனர் மறுப்பு ஹேமா கமிஷன் பின்னணியில் உருவாகிறதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in