வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் |

அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படம் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக ஹிந்தியில் மிக விரைவில் 600 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. மொத்தம் 13 நாட்களில் இந்த சாதனைநிகழ்ந்துள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களை விடவும் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆன ஒரு படம் இவ்வளவு வசூல், புதிய சாதனை என படைப்பது ஆச்சரியம்தான். ஹிந்தித் திரையுலகத்திலும் 1000 கோடி வசூல் சாதனை இதற்கு முன்பு மூன்று முறை நிகழ்ந்திருந்தாலும் இந்த 'புஷ்பா 2' சாதனை எதிர்பார்த்ததை விடவும் மிக அதிகமாக உள்ளது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஹிந்தியில் இப்படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னமும் வசூலைக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.