ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியானதும், அதில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பாக தனுசுக்கும், நயன்தாராவுக்கும் மோதல் ஏற்பட்டதும், அறிக்கை மோதல் தற்போது நீதிமன்றத்தில் தொடர்வதும் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், இதுகுறித்து நயன்தாரா தனியார் யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து பாடகி சுசித்ரா கூறியிருப்பதாவது: தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்டு இருந்த அறிக்கையை நான் பாராட்டி பேசியிருந்தேன். தனுஷ் மேல் என்னென்ன குற்றச்சாட்டு இருக்கிறதோ அது அனைத்தையும், அந்த அறிக்கையில் நயன்தாரா சொல்லி இருந்தார். அதனால் நான் அதை பாராட்டி இருந்தேன். மற்றபடி நயன்தரா - தனுஷ் வழக்கு பற்றி பேச வேண்டும் என்றால், இது இரண்டு பணக்காரர்கள் மோதி கொள்கிறார்கள். இருவருக்குமே பத்து கோடி என்பது டிப்ஸ் கொடுப்பது போல சாதாரணமான விஷயம் தான்.
அப்படியே பணம் அவங்க வீட்ல கொட்டி கிடக்கிறதுனால, ரெண்டு பேருக்குமே அகங்காரம் இருக்கு. நயன்தாராவுக்கு அகங்காரம் இருக்கிறது என்பதை அண்மையில் அளித்த பேட்டியில் தான் வெளிப்பட்டு உள்ளது. தமிழ் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டியில் எப்போதுமே நயன்தாரா பவ்யமாக தான் பேசுவார். ஆனால், இந்த யூடியூப் பேட்டியில் 'நான் நடிச்ச தமிழ் படத்தை ரசிகர்கள் பார்த்ததை விட, என்னுடைய டாக்குமெண்டரியைத்தான் அதிகம் பேர் பார்த்தார்கள்' என்று சொல்லி இருக்கிறார். இது நயன்தாராவிற்கு எவ்வளவு அகங்காரம் இருக்கும் என்பதைத்தான் காட்டுகிறது.
இந்த இன்டர்வியூ மூலமாக நயன்தாரா ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க பாத்திருக்கிறார். ஒன்னு தனுஷுக்கு எதிராக தான் இருப்பதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். 'ஜவான்' படத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு பாலிவுட்டில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வராததால், இதன் மூலம் பாலிவுட்டில் வாய்ப்பும் கேட்டுவிட்டார். தன்னை விமர்சிக்கும் யு டியூபர்களை 'குரங்குகள்' என்று சொல்லியிருக்கிறார் நயன்தாரா. ஆணால் உண்மையில் அவர்தான் பணத் திமிர் பிடித்த 'சொகுசு பூனை'யாக இருக்கிறார்.
இவ்வாறு சுசித்ரா கூறியுள்ளார்.