ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் 2023ம் ஆண்டில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் தான் காமெடியனாக இருந்த சூரி கதையின் நாயகனாக மாறினார். இந்த நிலையில் தற்போது விடுதலை படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக மாறினார். அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது. குறிப்பாக, தன்னுடைய அம்மாவுக்கு சூரி கடிதம் மூலம் ஒரு கதை சொல்வதும், அதே கதையை விஜய் சேதுபதி ஒரு போலீஸிடம் சொல்வது போன்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் வெற்றிமாறன். தமிழர் மக்கள் படை உருவாவது, விஜய் சேதுபதி போராளியாக மாறுவது என கம்யூனிச சித்தாந்தங்களை கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த நிலையில் இந்த விடுதலை- 2 படம் முதல் நாளில் தமிழகத்தில் 8 கோடியும், உலக அளவில் ஒன்பது கோடியும் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.