ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ஜெயிலர். இந்த படம் 650 கோடி வசூலித்தது. அந்த படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் படம் 250 கோடி வசூலித்தது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தோடு முடிவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவர், நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், புத்தாண்டு தினத்தில் ஜெயிலர்- 2 படத்தின் பிரமோ வீடியோ வெளியாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகவுள்ளது.