‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களாக 360 படங்களில் நடித்துள்ள மோகன்லால், தற்போது நம்பர் ஒன் இடத்தில் முன்னணி நடிகராகவே இருந்து வருகிறார். இருந்தாலும் தனக்குள் பல வருடங்களாகவே இருந்து வந்த டைரக்ஷன் ஆசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக தற்போது பரோஸ் என்கிற வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்தபோது விட்டுச்சென்ற சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாவலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பேண்டஸி திரைப்படமாக 3டியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் மோகன்லால். மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற வெற்றிகரமான படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இதுபோன்ற பேண்டஸி படங்களுக்கு விஎப்எக்ஸ் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒளிப்பதிவு என்பதும் ரொம்பவே முக்கியம். அந்த வகையில் இந்த படத்திற்கு தன்னுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை கூட்டணி சேர்த்துக்கொண்டார் மோகன்லால். படம் வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது படம் குறித்து புரமோட் பண்ணி வரும் மோகன்லால், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “சந்தோஷ் சிவன் இந்த படத்தில் மிகச்சிறந்த பணியை கொடுத்துள்ளார். எப்போதெல்லாம் நானும் அவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றுகிறோமோ அப்போதெல்லாம் அவர் தேசிய விருது பெறுவதும் நடக்கிறது. காலாபாணி, இருவர், வானப்பிரஸ்தம் என உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம், அந்த வகையில் இந்த பரோஸ் படத்திற்கும் அவருக்கான தேசிய விருதை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.