'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் அந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் நாட்டுப்புறப்பாடகி நஞ்சியம்மா என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் பாடிய களக்காத்தா என்கிற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
அதேபோல பீம்லா நாயக் படத்திலும் நாட்டுப்புறப் பாடகரான தெலுங்கானாவைச் சேர்ந்த தர்ஷனம் மொகிலையா என்கிற நாட்டுப்புறப் பாடகரை அழைத்து வந்து பாட வைத்தார்கள். அந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பயனாக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. கின்னரா என்கிற நாட்டுப்புற வாத்தியத்தை வைத்து இசைப்பதில் இவர் வித்தகர். இந்த நிலையில் 73 வயதான மொகிலையா நேற்று உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் அது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மருத்துவ சிகிச்சைக்கு பீம்லா நாயக் பட இயக்குனர் வேணு மற்றும் அவரது குழுவினரும் மாநில அரசாங்கமும் பல உதவிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மொகிலையாவின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.