2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஷொரனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா கணேஷ், 81. மலையாளத் திரைப்பட நடிகையான இவர், உடல் நலம் பாதித்து, கடந்த ஐந்து நாட்களாக வாணியம்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உடல், நேற்று மாலை ஷொரனூர் அருகே உள்ள 'சாந்திதீரம்' மயானத்தில் எரியூட்டப்பட்டது.
19வது வயதில் நாடகத்தில் நடிக்க துவங்கிய இவரின் முதல் மலையாளத் திரைப்படம், 1976ல் வெளிவந்த 'மணிமுழக்கம்' ஆகும். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், 200க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1991ல் 'முகசித்ரம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் இவர் நடித்த 'பாத்தும்மா' என்ற கதாபாத்திரம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இவரது கணவர் பிரபல மலையாள நாடக ஆசிரியரும், இயக்குனரும், நடிகருமான கணேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி தொடர் இயக்குனர் மனோஜ், சங்கீதா ஆகியோர் இவர்களது வாரிசுகளாவர்.