அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி! சோசியல் மீடியாவில் வெடித்த சலசலப்பு | 'கொலைக் கைதி' நடிகர் தர்ஷனுக்கு 6 வார ஜாமின் | ஷாலின் ஷோயா கட்டிய புது வீடு | சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு: சிவகார்த்திகேயன் | டிசம்பர் 4ல் நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்? | இயக்குனருடன் திருமணத்துக்கு தயாராகும் ரவீணா ரவி | மெஸன்ஜரில் 'பேஸ்புக்' பேய் | அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா | 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | 'ஏ' படத்தில் மட்டும் நான் நடிப்பதாக ரசிகர்கள் வருத்தம்: ஜெயம் ரவி |
பிரபல சீனியர் மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக் மீது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 2016ல் அவர் தன்னிடம் ஒரு ஹோட்டலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு அது கொடுத்த துணிச்சலில் தான் இத்தனை வருடங்கள் கழித்து அவர் புகார் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சித்திக் விண்ணப்பித்த முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுறைவான சித்திக் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை பெற்றார்.
அதேசமயம் போலீசாரின் விசாரணைக்கும் அவர் சென்று வந்தார். ஆனால் தங்களிடம் அவர் சரியானபடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது முன் ஜாமீன் மனு மீதான இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதற்கு பதிலாக இன்னும் கால அவகாசம் கொடுத்து அவரது இடைக்கால ஜாமினை நீட்டிப்பு செய்துள்ளது. இது கேரள போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.