ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
கடந்த செப்டம்பர் மாதம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். காவல் துறையிலும் புகார் அளித்தனர். அப்படி பிரபல சீனியர் நடிகர் ஆன சித்திக் மீது துணை நடிகை ஒருவர், அவர் தன்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கேரள உயர்நீதிமன்றம் சித்திக்கிற்கு ஜாமின் மறுத்து விட்ட நிலையில் தான் கைதாவதில் இருந்து தப்பிக்க சில நாட்கள் தலைமறைவான சித்திக், உச்ச நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமின் பெற்றார். அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதுடன் அதேசமயம் அவர் போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் விசாரணையில் அவர் சரியான தகவல்களை தராமல் புறக்கணிப்பதாகவும் அலட்சியம் காட்டுவதாகவும் அதனால் அவரை கைது செய்து விசாரிக்க முடிவு எடுத்த போலீஸார் அவருக்கு வழங்கப்பட்ட இடைகால ஜாமினை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனால் தான் கைதாவதில் இருந்து தப்பிக்க மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார் சித்திக். அவரது வேண்டுகோளை ஏற்று தற்போது அவரது இடைக்கால ஜாமினை நவம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் தற்போது கைதாவிலிருந்து தப்பித்துள்ளார் நடிகர் சித்திக்.