Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

15 ஜன, 2026 - 12:59 IST
எழுத்தின் அளவு:
JanaNayagan-film-case-Vijays-appeal-Supreme-Court-dismisses
Advertisement


விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்று கிடைக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை . இந்த படத்துக்கு சான்று கோரி , தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஆனால், சென்சார் போர்டு சார்பில் டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்து, அதற்கு தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால், தேதி குறிப்பிடாமல் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் , ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி , வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஜனவரி 20ம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற அமர்வில் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ... பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap