ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் சித்திக். மலையாள நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த மாதம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து துணிச்சலாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளியே பேச தொடங்கினார். அந்த வகையில் நடிகர் சித்திக் சில வருடங்களுக்கு முன்பு தன்னை ஒரு ஹோட்டலில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என நடிகை ஒருவர் திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவானது. கேரள உயர் நீதிமன்றத்தில் இவருக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டு அதனால் தலைமறைவான சித்திக் உச்சநீதிமன்றத்தை நாடி தன்னை கைது செய்ய இடைக்கால தடை பெற்றார். இந்த சமயத்தில் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும் அவர் தற்போது தங்களது விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பதில்லை என சிறப்பு புலனாய்வு போலீசார் கூறியுள்ளனர்.
அது மட்டுமல்ல உச்சநீதிமன்றம் சித்திக் போன்ற ஒரு நடிகர் மீது இப்படி வழக்கு தொடரும் போது அவருக்கு உள்ள புகழையும் கணக்கில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது கேரளா அரசு உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள ஒரு மனுவில் தயவுசெய்து சித்திக்கின் பெருமையை வரலாற்றின் பதிவு செய்வதற்கு முன்பு அவரைப் பற்றிய உண்மையை பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும் என ஒரு கடுமையான வேண்டுகோள் வைத்துள்ளது.