தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் விலை வெளிமார்க்கெட் விலையை விட மிகவும் அதிகமாக இருப்பது அனைவருக்கம் தெரிந்ததே. காபி, பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் இதர திண்பண்டங்களின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கே இருக்கின்றன.
2023ல் நடந்த சிஐஐ ஆய்வில், ஒருவர் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆகும் செலவு 1800 ரூபாய் ஆகிறது என அறியப்பட்டது. அப்படியென்றால் ஒரு குடும்பம் சென்றால் எவ்வளவு ஆகும். ஊடகங்கள் இது பற்றி எத்தனை முறை எழுதினாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தியேட்டர்களுக்கு வரும் மக்களின் கூட்டணம் 15 சதவீதம் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் கட்டணங்களுக்கு மாநில அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 200 ரூபாய் என நிர்ணம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து சில தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் சங்கத்தினர் கர்நாடக உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கினர்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உள்ள திண்பண்டங்களின் அதிக விலை குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, காபிக்கு ரூ. 700 வசூலிக்கிறீர்கள். இப்படி விற்றால் அது மக்களை தியேட்டரை விட்டே விரட்டி விடும். மாநில அரசின் நடவடிக்கை நுகர்வோரை பாதுகாக்கும். சினிமா வீழ்ச்சியடைந்து வருகிறது. மக்கள் அதை ரசிக்கும் விதமாக மாற்றுங்கள், இல்லையென்றால் தியேட்டர்கள் காலியாக மாறும் நிலை வரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.