அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகர் பஹத் பாசில், சமீப வருடங்களில் விக்ரம், புஷ்பா 2, மாமன்னன், வேட்டையன் என தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்புத் திறமையால் தென்னிந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக மாறிவிட்டார்.
சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த வேட்டையன் படம் வெளியான நிலையில் கடந்த வாரம் மலையாளத்தில் அமல் நீரத் டைரக்சனில் குஞ்சாக்கோ போபனுடன் அவர் இணைந்து நடித்த போகன்வில்லா என்கிற படமும் வெளியானது. இதைத் தொடர்ந்து பஹத் பாசில் வில்லனாக நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படமும் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் லால் ஜோஸ் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் கே.என் பிரசாந்த் என்பவர் எழுதிய 'பொணம்' என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக கேரள கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நடக்கும் ஒரு பழி வாங்கும் கதை பின்னணியில் இது உருவாக இருக்கிறதாம். இதற்கு முன்னதாக 2013ல் லால் ஜோஸ் இயக்கிய இம்மானுவேல் என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் பஹத் பாசில். அந்த வகையில் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது டைரக்சனில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.