பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாளத் திரையுலகத்தின் முக்கிய நடிகரான பஹத் பாசில் தமிழில் இதுவரையில் மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், முதல் முறையாக தமிழில் ஒரு முழு நீள ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை '96, மெய்யழகன்' படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்க இருக்கிறார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இந்தப் படமும் உணர்வுபூர்வமான ஒரு படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் பிரேம்.
2017ல் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'வேலைக்காரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பஹத் பாசில். அந்தப் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்', கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' , சமீபத்தில் வடிவேலு நடித்த 'மாரீசன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஓடும் குதிர சாடும் குதிர' மலையாளப் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது இரண்டு மலையாளப் படங்களிலும் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார் பஹத்.