'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

மலையாளத்தில் சமீபத்தில் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி, ரியா சிபு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மாயா' . உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அகில் சத்யன் அளித்த பேட்டி ஒன்றில் சர்வம் மாயா குறித்து கூறியதாவது, "முதலில் இந்த படத்தில் டெலுலு கதாபாத்திரத்தில் நடிக்க பிரீத்தி முகுந்தனை தான் ஒப்பந்தம் செய்தோம். ஆனால், அவர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் வழக்கமான காதல் கதை படமாக அமைந்து விடும் என இன்னும் இளமையான நடிகை வேண்டும் என தேடினோம். அப்போது தான் நான் ரியா ஷிபுவின் ரீல்ஸ் வீடியோவை பார்த்தேன். அதன் பின்னர் அவரையே 'டெலுலு' கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தோம்.
முதலில் இந்த படத்திற்கு தலைப்பும் 'சர்வம் டெலுலு' என்று தான் வைத்திருந்தோம். ஆனால், நிவின் பாலி 'டெலுலு' என்கிற வார்த்தைக்கு என்னிடம் அர்த்தம் கேட்டார். 'சர்வம் மாயா' என தலைப்பு வைத்தால், ரொம்ப வழக்கமான படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், 'சர்வம் மாயா' என்பதை தலைப்பாக வைக்கலாம் என நிவின் பாலி தான் பரிந்துரை செய்தார்" என தெரிவித்துள்ளார்.