அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மலையாள திரை உலகில் 35 வருடங்களாக பிசியான குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் சித்திக். சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல பெண்கள் தைரியமாக தாங்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை போலீசில் புகார் அளிக்க முன் வந்தனர். அப்படி ஒரு பெண், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஒரு ஹோட்டலில் தன்னிடம் நடிகர் சித்திக் அத்துமீறி நடந்து கொண்டார் என திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,
இதனைத் தொடர்ந்து சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகும் சூழல் உருவானபோது கேரள உயர்நீதிமன்றமும் ஜாமீன் தராமல் கை விரித்த போது சில நாட்கள் தலைமறைவாக இருந்து உச்ச நீதிமன்றத்தை நாடி கைது செய்யப்படுவதற்கான இடைக்கால தடை பெற்றார் சித்திக். சமீபத்தில் மீண்டும் அந்த தடைக்கான நீட்டிப்புக் காலமும் அவருக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவருக்கு வலியுறுத்தியது.
ஏற்கனவே அவர் சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்றும் தவறான தகவல்களை கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும் கடுப்பில் இருந்த விசாரணை அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு வந்த அவரை கைது செய்தனர். அதே சமயம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக சித்திக் உடனடியாக மீண்டும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலரும் எதற்காக இந்த அவசர கைது மற்றும் ஜாமீன் நாடகம் என காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.