செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள். இந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக மோகன் பாபு வீட்டுக்குள் நுழைய முயன்ற மனோஜ் மஞ்சுவை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதை தொடர்ந்து கடும் கோபத்துடன் வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்த மோகன்பாபுவை அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தபோது அவர்களின் ஒருவரின் மைக்கை பிடுங்கி வீசி அடித்தார். இதனால் காயம் அடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோகன் பாபு மீது வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மோகன் பாபு தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் வழங்கினால் மோகன்பாபு துபாய் சென்று விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மோகன் பாபுவின் ஜாமீனை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில் தன்னால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் மோகன்பாபு. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கணிசமான தொகை இழப்பீடு தர தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறும்படியும் பத்திரிகையாளர் சங்கத்தை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.