அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

நடிகை சமந்தாவுக்கும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல்' இணையத் தொடர்களின் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு என்பவருக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருமணமானவரான ராஜ் அவருடைய மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.
சமந்தா - ராஜ் இருவருக்கும் இடையே 'பேமிலி மேன்' படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. சமந்தா தற்போது மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியுள்ளார். நேற்றைய தீபாவளித் திருநாளை புதிய வீட்டில் தனது காதலர் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சமந்தா.
இதன் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்களோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சமந்தா, ராஜ் இதுவரையில் தங்கள் காதலைப் பற்றி எதுவும் சொன்னதில்லை.