தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லி. அதையடுத்து ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியவர், தமிழில் விஜய்யை வைத்து, தான் இயக்கிய தெறி படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து அட்லி கூறுகையில், பேபி ஜான் படம் டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். பேபி ஜான் படத்தை தெறி படத்தின் ரீமேக் என்று சொன்னாலும் முழுமையான ரீமேக் படம் என்று சொல்ல முடியாது. தெறி படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு பல இடங்களில் மாற்றம் செய்திருக்கிறோம். அதனால் தெறி படத்தைப் போலவே பேபி ஜான் படமும் இருக்கும் என்று தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் ஏமாந்து போவார்கள் என்கிறார் அட்லி