மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். அதிக அளவு இளம் ரசிகர்களை பெற்ற இவர் கடந்த வருடம் வெளியான அனிமல் படத்தில் மிக வித்தியாசமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ராஹா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இருவருமே ராஹா மீது மிகுந்த பாசம் செலுத்தி எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மகள் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள ஆலியா பட் அதில் கூறும் போது, “தனது மகள் உன்னி வா வா என்கிற மலையாள பாடலை கேட்டால் தான் தூங்குகிறாள் என்றும் இதற்காகவே இந்த மலையாள பாடலை தனது கணவர் ரன்பீர் கபூர் கற்றுக்கொண்டு மகளை தூங்க வைப்பதற்காக தினமும் பாடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த சமயத்தில் கவனித்துக் கொண்ட மலையாள செவிலியர் பெண் இந்த பாடலை பாடித்தான் குழந்தையை தூங்க வைப்பாராம். குழந்தையும் அதற்கு பழக்கப்பட்டு விட்டதால் அந்தப் பாடலை அப்படியே தற்போது ரன்பீர் கபூரும் காப்பியடித்து குழந்தையை தூங்க வைக்க பயன்படுத்தி வருகிறாராம். மலையாளிகளின் எவர்கிரீன் பாடலான இந்த பாடலை கே.ஜே யேசுதாஸ் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து பாட மோகன் சித்தாரா இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.