இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் சவ்பின் சாஹிர். குறிப்பாக துல்கர் சல்மானின் நண்பராக அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள அவர் அடிப்படையில் உதவி இயக்குனரும் கூட. பின்னர் துல்கர் சல்மானை வைத்து பறவ என்கிற படத்தை இயக்கிய இயக்குனராக மாறினார்.
சமீப வருடங்களாக காமெடியில் இருந்து குணச்சித்திர நடிப்பிற்கும் மாறி உள்ள அவர் தயாரிப்பாளராகவும் மாறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படத்தை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்ததோடு பெயரும் வாங்கித் தந்தது.
இந்த நிலையில் நான் சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி. கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் 96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மெய்யழகன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கார்த்தி, அர்விந்த்சாமி இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது மலையாள சினிமாவைப் பற்றி அவர்கள் பேச்சு திரும்பியது.
அப்போது சவ்பின் சாஹிர் பற்றி குறிப்பிட்ட அரவிந்த்சாமி, “மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு முன்பே அதாவது கும்பலாங்கி நைட்ஸ் படத்திலேயே அவரது நடிப்பை நான் விரும்பி ரசித்தேன். அதன் பிறகு அவரது படங்களை தவறாமல் பார்த்து வருகிறேன்” என்றார்.
கார்த்தியும் அதை ஆமோதிப்பது போல கும்பலாங்கி நைட் ஒரு நல்ல படம். சவ்பின் சாஹிர் ஒரு நடிகராக மட்டுமல்ல ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக திறமை கொண்ட நபர்” என்று தன் பங்கிற்கு பாராட்டினார்.