Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோயினே வராமல் கிளைமாக்ஸ் காட்சி! என்ன ஆச்சு ரேஷ்மாவுக்கு? | மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கு முடக்கம் ; காரணம் இதுதான் | ஹிட் சீரியலிலிருந்து விலகிய ரிஹானா! அவரே சொன்ன காரணம் | தில்லானா மோகனாம்பாள், வீரா, லவ் டுடே - தமிழ் புத்தாண்டு சிறப்பு ஞாயிறு திரைப்படங்கள் | நான் செய்யாததை லோகேஷ் செய்துள்ளார் : ஹரி | ‛அனிமல்'-ஐ பார்ப்பவர்கள் ‛சித்தா'-வை பார்க்க முடியவில்லையா : சித்தார்த் | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? - ரவிச்சந்திரன் பேட்டி | சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா | கமலின் தக்லைப் படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறினார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டா தம்பி படத்தின் மீது கதை திருட்டு புகார்

12 பிப், 2024 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Story-plagiarism-complaint-against-Vijay-Devarakonda-Thambi-movie

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் அவரது நடிப்பில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பை பெற்றதுடன் 50 கோடியை தாண்டி வசூலித்தது.. இந்த படத்தை இயக்குனர் சாய் ராஜேஷ் என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது தான் எழுதிய பிரேமிச்சோடு என்கிற கதையை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனருமான ஷிரின் ஸ்ரீராம் என்பவர் ஐதராபாத்தில் உள்ள ராய்துர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கண்ணா ப்ளீஸ் என்கிற என்கிற பெயரில் தான் முதலில் உருவாக்கிய இந்த கதையை இயக்குனர் சாய் ராஜேஷிடம் தான் கூறியதாகவும் அந்த கதையை தன்னுடைய அனுமதியின்றி பேபி படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமாரிடம் சாய் ராஜேஷ் கூறி பட வாய்ப்பு பெற்றுள்ளார் என்றும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து கதை திருட்டு குறித்து இவர் புகார் கூறியுள்ளது பரபரப்பை மட்டுமல்ல இதற்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்கிற சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேபி திரைப்படம் வேறு மொழிகளில் ரீமேக் ஆகும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றது. இந்த படத்தில் கதை விவகாரத்தில் சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஷிரின் ஸ்ரீராமுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு அதில் திருப்தியான விதத்தில் சமரசம் ஏற்படாததால் தான் இப்படி காலம் தாழ்ந்து அவர் புகார் அளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி வில்லனும் சீரியஸ் காமெடியனும் இணைந்து நடிக்கும் 'தெக்கு வடக்கு'காமெடி வில்லனும் சீரியஸ் ... பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த மலையாள வில்லன் பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in